Sat. Dec 21st, 2024
Spread the love

கணவர் கணேஷ் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்த நாயகி வரலட்சுமி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு வேரு ஊருக்கு செல்கிறார். வேலை தேடி அலையும் வரலட்சுமி, தனது மகளுக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறார். மேலும் மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்த மைம் கோபி, வரலட்சுமி மகளை பின் தொடர்கிறார். இறுதியில் வரலட்சுமி மகளுக்கு ஆபத்து வர காரணம் என்ன? மைம் கோபி, மகள் பின்னால் துரத்த காரணம் என்ன? தன் மகளை வரலட்சுமி காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகியாக நடித்து இருக்கும் வரலட்சுமி, முழு கதையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். தன் மகளுக்காக துடிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். அதிரடி காட்சி பெரியதாக எடுபடவில்லை. இவருக்கு கணவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் வித்தியாசமான வேடம் ஏற்று ரசிக்க வைத்து இருக்கிறார். குழந்தை கிருத்திகா எதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் கவரவில்லை.

கணவன் மனைவி ஈகோ, குழந்தை பாசம், குழந்தை மாற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ். சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், யூகிக்க முடிந்த காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகள் சரியாக கனெக்ட் ஆக வில்லை. திரைக்கதை தெளிவில்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலவீனம். ராகுல் ஸ்ரிவட்சாவின் ஒளிப்பதிவு அதிகம் கவரவில்லை. மஹேந்திர நாத் கொண்ட்லா சபரி படத்தை தயாரித்துள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *