ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.
தற்பொழுது கார்த்தியின் 26வது படத்தை நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை ’96’ படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கிவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.