மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள படம் ” காடுவெட்டி ” சோலை ஆறுமுகம் இயக்கும் இப்படத்தில் ஆர். கே. சுரேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீர்த்தனா மற்றும் விஷ்மியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணியசிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசுகையில்,
”மறுமலர்ச்சி, சிந்துநதிப் பூ, ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்குப் பிறகு வடமாவட்ட வாழ்வியலை சொல்லும் படம் தான் காடுவெட்டி, மன்னர்கள் போர் செய்த காலத்தில் போர்வீரர்கள் போர் பயிற்சிக்காக இடங்களை தேர்வு செய்து காடுகளை வெட்டினார்கள்,வெட்டிய நிலங்களில் பாதியை போர் பயிற்சிக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர்,போர்க்கால முடிவுக்குப் பிறகு அந்த நிலங்கள் ஊர்களாக மாறியது,அந்த ஊர்களுக்கு காடுவெட்டி என பெயரிட்டனர்,விவசாயம் செய்த தமிழ் பூர்வக்குடிகளின் கதை என்பதால் காடுவெட்டி என படத்திற்கு பெயர் வைத்தோம்” என்றார்.