குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்தது மீடியா மேசன் நிறுவனம். மேலும் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான “சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம்” போன்ற நிகழ்ச்சிகளையும் உருவாக்கியது மீடியா மேசன் என்ற இந்த நிறுவனம்தான். இந்நிலையில் media masons நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது. இதுகுறித்து “மீடியா மேசன்ஸ்” நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
அதில், “தனது 25 வருட தொலைக்காட்சி பயணத்தை நாங்கள் விஜய் டிவியிடம் பணியாற்றினோம். விஜய் டி.வி எங்களின் இன்னொரு வீடு என்றும், துரதிஷ்ட்டவசமாக , சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை. இது வரை எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
.