நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டபின் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தனது 2 மகன்களை அன்போடு வளர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா ‘அன்பாலோ’ செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் 2 பேரும் பிரிகிறார்கள் என்று கூறப்பட்டது. ரசிகர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பிரிகிறார்கள் என்பது வதந்தியா அல்லது உண்மையா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.