Tue. Jun 17th, 2025
Kiss movie/thiraiosai.comKiss movie/thiraiosai.com
Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.

இத்திரைப்படம் ஒரு ரோம்- காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது. கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான திருடி அனிருத் குரலில் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. ஜூலை மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் 2ஆவது சிங்கிள் ” ஜில்லேலாமா (Jillelama )” நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *