நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர். இவர், ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ ‘அரண்மனை’, ‘பிசாசு’ போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இந்த வரிசையில் ஆண்ட்ரியா தற்போது நாஞ்சில் இயக்கத்தில் கா என்கிற படத்தில் நடித்துள்ளார்.
காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு கடந்த 2022ல் “கா” படத்தின் டிரைலரை வெளியிட்டது. இந்நிலையில், ‘கா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘கா’ திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.