திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கினர். அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தா, தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.