Mon. Oct 7th, 2024
Spread the love

அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். திறமை கொண்ட நடிகையான இவர் தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மைய்ய கருவாக கொண்டு உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலம் இயக்குநர் ஆகிறார். ஷார்ட்பிளிக்ஸுடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலமாக இந்த வெப் சீரிஸை அவரே தயாரிக்கிறார்.

சோனாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இந்த வெப்சீரிஸில் அவரது வெவ்வேறு வயது காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு நடிகைகள் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “இளமை பூக்கும் பதினான்காம் வயதில் நான் ஒரு அழகான வாழ்க்கையை எதிர்நோக்கி கொண்டிருந்தேன், ஆனால் அந்த கரம் என்னை பிடித்தது.. என்னை தள்ளியது.. நான் பேசுவதற்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ உயிர் வாழ்கிறேன்” என்கிற வாசகங்களுடன் நடிகை சோனாவின் 14 வயதான இளம் பருவத்தை இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் காட்டுகிறது. ‘மத்தகம்’ என்கிற வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்திருந்த நடிகை ஜனனி விஜயகுமார், சோனாவின் இந்த 14 வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆல்வின் புருனோ இசையமைக்க, வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவை கையாள, படத்தொகுப்பு பணிகளை அருள் மேற்கொண்டுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *