Wed. Jan 14th, 2026
Spread the love

நடிகர் சிம்பு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் பதிவிட்டு தனது அன்பை பகிர்ந்துள்ளார். அனல் பறக்க இரண்டு சிம்பு நேருக்கு நேர் பார்த்து நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed