Sun. Oct 6th, 2024
Spread the love

இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கி உள்ள புதிய படம் ‘இடிமுழக்கம்’. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் ‘இடிமுழக்கம்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *