Mon. Oct 7th, 2024
Spread the love

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ்காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார்.

ஒரு சிறு ஈகோவால் ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் கரு. சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக, மாறி இருவர் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லும் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இதன் தொடக்கமாக 4 நிமிடம் கொண்ட அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் சிவாஜி, ரஜினி, விஜய் ஆகியோர் பாணியில் நடித்து காட்டி கதாநாயகன் செய்யும் லூட்டிகள் இடம் பெற்றுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *