Mon. Oct 7th, 2024
Spread the love

‘சேத்துத் மான்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த, இயக்குனர் தமிழ் இயக்கும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தை சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் ‘கனா’ புகழ் தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் கதை , வசனம் எழுதியுள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் இசை அமைத்துத்ள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் குறித்து இயக்குனர் தமிழ் பேசும்போது, “லவ் அண்டு பேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல் என பரவலாக இருப்பதை தவிர்த்து, அதிகார அரசியல் மட்டுமின்றி , சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை, இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படமாக இது இருக்கும். ஒரே கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது” என கூறினார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *