சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உள்ளது. அதன் அடிப்படையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டி.ஆர்.பி.யில் முதல் இடத்தை பிடித்துவிடுகின்றன.
அந்தவகையில், 2022 ஆண்டு முதல் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் பிரியமான தோழி. இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் விக்கி ரோஷன், சான்ரா பாபு, தீப்தி ராஜேந்தர் ஆகியோர் பிரதான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரியமான தோழி தொடர் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரியமான தோழி தொடர் நிறைவடையவுள்ளதால், அருவி தொடர் பகல் 1மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.