கர்நார்டகாவில் வழக்கு ஒன்றில் ஆஜரான நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினி நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் அவரது வீட்டில் அளித்த பேட்டியில் :
”ரொம்ப நாளாகவே இந்த வழக்கு போய் கொண்டிருக்கிறது. என்னை துன்புறுத்தவும், மிரட்டு வதற்கும் மட்டுமே புகார்தாரர்களால் பொய்யான, கேவலமான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகை மற்றும் ஊடகத்தில் வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை. மீடியா ஒன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோச்சடையான் படத்திற்காக பைனான்ஸ் கொடுத்தனர். அதற்கு நான் உத்தரவாத கையெழுத்து போட்டேன். அதற்கு உன்டான பணமும் செட்டில் ஆகிவிட்டது. அதன் பின் அந்த ஒப்பந்தத்தை மாற்றி என்னை இதில் சிக்க வைத்துள்ளனர். இதற்கு காரணம் என் பாப்புலாரிட்டியே. சுப்ரீம் கோர்ட்டில் என்னை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதுடன் டிஸ்சார்ஜ் விண்ணப்பத்தை தாக்கல் செய்யவும் அனுமதித்தது. நீதிமன்றத்தில் ஜாமீனுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல் மற்றும் சில போலி ஆதாரங்களால் என்னை இதில் சிக்க வைத்தனர். அதனாலேயே நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்துத் நேற்று கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். இத்தனை ஆண்டுகளாக எங்களை துரத்தி வழக்கு போட்டனர். சாதாரண பெண்ணாக இருந்தால் இந்த வழக்கு வந்திருக்காது. பிரபலமாக இருப்பதால் எனக்கு இந்த நிலை. நியாயத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம். அநியாயத்துக்கு துணைபோக மாட்டேன். என் மீது வழக்கு போட்ட பின், மூன்றாவது நபர் மூலம் செட்டில் மென்ட் பேசினர். நியாயம் எது என தெரிந்தால், ரஜினி சார் எது வேண்டுமானாலும் செய்வார். அவரிடம் சொல்லிவிட்டே இன்று உங்களை சந்திக்கிறேன். என் மீது வழக்கு போட்டவர்கள் மீது, நான் அவதுாறு வழக்கு தொடுக்க உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.