நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதில் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.