Fri. Jun 13th, 2025 12:29:13 AM
Spread the love

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. ‘லவ்வர்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘வாடி என் டிரிப்’ என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *