கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆர்யா, சந்தானம் இருவரும் கூறியதாவது, “இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி அடுத்து இயக்கும் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கவுளோம். அது ஒரு அட்வென்ச்சர் படம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு அந்த படம் உருவாகும்'' என்றார்கள். இதன் மூலம் டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கும் மூன்றாவது படத்திலும் சந்தானம் நடிக்கின்றார் என்பது அறியப்படுகிறது.