Thu. May 29th, 2025 12:05:23 PM
Spread the love

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.

விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தங்கலாம் படம் வரும் 26ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கலாம் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *