Sun. Dec 22nd, 2024
Spread the love

ஜென்டில்மேன், காதலன், இந்தியன், உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பின் போது காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய மகள் சனா, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றிய இவர், தற்போது ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சனா இயக்கும் முதல் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் இளம் வயது கேரக்டரில் நடித்திருந்த சந்தோஷ் என்பவர் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி.,யின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *