Wed. Jun 18th, 2025
venniradai-moorthy/thiraiosai.comvenniradai-moorthy/thiraiosai.com
Spread the love

நடிகர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியும் அந்த சாதனையைத் தொடப்போகிறார். தற்போது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டைத் தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம், 1965ம் ஆண்டு வெளியானது. அந்த வகையில் 60வது ஆண்டைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பை நிறுத்திவிட்டார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 620 படங்களில் நடித்தவர், இப்போது 89 வயதை தொட்டு இருப்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து சில மீடியாக்களில் பேசியவர், “நான் நிறைவாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னை ரசித்த ரசிகர்கள், ஆதரவு கொடுத்த சினிமாகாரர்களுக்கு நன்றி” என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.

சமீபகாலமாக அவர் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வருவது இல்லை. இவருக்கு ஒரே மகன் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கிறார். அதனால் அவ்வப்போது அமெரிக்கா சென்று வருகிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *