Sun. Oct 6th, 2024
Spread the love

சிபி, பவ்யா த்ரிக்கா இருவரும் காதலர்கள். சில நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சிபி, காதலி பவ்யாவுடன் காரை ஓட்டிச் செல்லும் போது ஒருவரை இடித்துக் கொன்று விடுகிறார். காரை நண்பனின் காரேஜில் மறைத்து வைக்கிறார். விபத்தில் இறந்த மனோஜ் முல்லத் மகன் ஜெய் ஆதித்யா, தனது அப்பா இன்னும் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து அழுகிறார். ஏற்கெனவே அம்மாவை இழந்த ஜெய் ஆதித்யாவுக்கு அந்த சமயத்தில் ஆறுதல் சொல்கிறார் பாலியல் தொழில் செய்யும் யாஷ்மின் பொன்னப்பா. தனது தம்பியைக் அடித்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் மனோஜைத் தேடி சென்னை வருகிறார் வில்லன் வின்சென்ட். ஆனால் மனோஜ் இறந்து போனது தெரிய வர, அவரது மகன் ஜெய் ஆதித்யாவை இழுத்துக் கொண்டு போகிறார். அதே நேரத்தில் அங்கு வரும் சிபி, ஜெய் ஆதித்யாவை காப்பாற்றுகிறார். அடுத்து நடப்பது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகியாக பவ்யாவை சொல்வதை விட சிறுவன் ஜெய் ஆதித்யாவைக் காப்பாற்றத் துடிக்கும் யாஷ்மின் பொன்னப்பாவை கதாநாயகி எனச் சொல்லலாம். பாலியல் தொழில் செய்தாலும் அவர்களுக்கும் நல்ல குணம் இருக்கும் என்பதை அவரது கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். யாஷ்மின் தோற்றம் ரிச் ஆகத் தெரிந்தாலும் நடிப்பில் அதை மறைக்க முயல்கிறார். ஜெய் ஆதித்யா சில காட்சிகளில் யதார்த்தமாகவும், சில காட்சிகளில் ஓவராகவும் நடித்திருக்கிறார்.

ஜெய் ஆதித்யாவின் அப்பா மனோஜ் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் தலைமைக் காவலராக பாலாஜி சக்திவேல். எப்படியாவது அவருக்கு உதவ வேண்டுமென துடிக்கிறார். சிபிக்கு உதவும் நண்பனான ஜெகன், காமெடி செய்யாமல் அடக்கி வாசித்துள்ளார். வில்லனாக வின்சென்ட், காட்சிக்குக் காட்சி ஓவர் நடிப்பு. ஜெய் ஆதித்யாவுக்கு உதவி செய்யும் பாதிரியாராக ராதாரவி. வில்லன் வின்சென்ட் உடன் ஒரு பாதிரியார் அடியாள் போல ஏன் கூடவே போகிறார் எனத் தெரியவில்லை. சாம் சி.எஸ் பின்னணி இசை படத்தை ஆங்காங்கே காப்பாற்றுகிறது. இரவு நேரக் காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளது. ஜெயசந்தர் பின்னம்னேனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் உள்ள கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் தனித் தனியாகப் பயணிக்கிறது. கிளைமாக்சில்தான் ஒன்றிணைகிறது. அதுவரையிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நகரும் உணர்வையே நமக்குத் தருகிறது. அதுவே படத்தின் மைனஸ் ஆகவும் அமைந்துவிட்டது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *