தயாரிப்பாளர் திரவ், இஸ்மத் பானு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பம் குளிர் மழை’. அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க எப்டிஎப்எஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.