Sun. Oct 6th, 2024
Spread the love

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில், தற்போது ஒவ்வொரு துறைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிறந்த சர்வதேச படமாக தி சோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் (The Zone of Interest) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் இங்கிலாந்தில் உருவான படம் ஆகும்.

சிறந்த துணை நடிகை விருது- டிவைன் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்ட் ஓவர்ஸ்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது- நாடியா ஸ்டேசி, மார்க் கௌலியர், ஜோஷ் வெஸ்டன் (புவர் திங்க்ஸ் )

சிறந்த புரோடக்சன் டிசைன் விருது – புவர் திங்க்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது – ஹோலி வாடிங்டன் (புவர் திங்க்ஸ்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- த பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த திரைக்கதை விருது- ஜஸ்டின் ட்ரீயர் மற்றும் ஆர்தர் ஹராரி (அனாடமி ஆஃப் ஃபால்)

தழுவல் திரைக்கதை விருது- கார்ட் ஜெஃபெர்சன் (அமெரிக்கன் ஃபிக்சன்)

சிறந்த துணை நடிகர் விருது- ராபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *