Wed. Oct 2nd, 2024
Spread the love

தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-

சிறந்த படம்

முதல் பரிசு- தனி ஒருவன்,

2-வது பரிசு- பசங்க-2,

3-வது பரிசு- பிரபா,

சிறப்பு பரிசு – இறுதிச்சுற்று,

சிறப்பு பரிசு – 36 வயதினிலே. (பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்)

சிறந்த நடிகர் – ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று),

சிறந்த நடிகை – ஜோதிகா (36 வயதினிலே),

சிறந்த நடிகர் சிறப்பு பரிசு – கவுதம் கார்த்திக் (வை ராஜா வை),

சிறந்த நடிகை சிறப்பு பரிசு – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று),

வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்),

நகைச்சுவை நடிகர் – சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு),

நகைச்சுவை நடிகை – தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),

சிறந்த குணச்சித்திர நடிகர் – தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்),

குணச்சித்திர நடிகை – கவுதமி (பாபநாசம்),

சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று),

சிறந்த கதையாசிரியர் – மோகன் ராஜா (தனி ஒருவன்),

சிறந்த இசையமைப்பாளர் – ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்),

சிறந்த பாடலாசிரியர் – விவேக் (36 வயதினிலே),

சிறந்த பின்னணி பாடகர் – கானா பாலா (வை ராஜா வை),

பின்னணி பாடகி – கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே),

சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்),

சிறந்த ஒலிப்பதிவாளர் – ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க),

சிறந்த எடிட்டர் – கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்),

சண்டை பயிற்சியாளர் – ரமேஷ் (உத்தம வில்லன்),

நடன ஆசிரியர் – பிருந்தா (தனி ஒருவன்),

ஒப்பனை கலைஞர் – சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று),

தையல் கலைஞர் – வாசுகி பாஸ்கர் (மாயா),

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2),

சிறந்த பின்னணி குரல் (ஆண்) – கவுதம் குமார் (36 வயதினிலே),

சிறந்த பின்னணி குரல் (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று).

இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *