Mon. Oct 7th, 2024
Spread the love

சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அது தவறாகவே முடிவதால், தான் ஒரு அன்-லக்கி என்று நினைத்துக் கொள்கிறார் நாயகி ஹன்சிகா. இந்த சமயத்தில், ஒரு கல் மீது, ஹன்சிகாவின் இரத்தம் விழுந்து, அது சற்று உயிர்ப்பிக்கிறது. அந்த கல் மூலமாக, ஹன்சிகாவிற்கு தொடர்ந்து நல்லதே நடக்கிறது. கிடைக்காத வேலை கிடைக்கிறது. லக்கியாக மாறும் ஹன்சிகாவிற்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் வேறு சில தீங்களும் நடக்கிறது. ஒரு கட்டத்தில், இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணம் இந்த கல்தான் என நினைத்து அந்த கல்லை தூக்கி எறிகிறாள். அதிலிருந்து ஒரு அமானுஷ்ய சக்தி அவளை பின் தொடர்கிறது. இனி அவள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர்கள் குருசரவணன் மற்றும் சபரி இவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ”கார்டியன்”, படகதையில் ஒரு கனெக்ட் இல்லாமல் போனதால் தனியே பயனிக்கிறது திரைக்கதை.

படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சிகள் மிரள வைத்தது, ஆனால் அதை தொடர்ந்து வந்த காட்சிகளில் புதியது என்று ஒன்றுமில்லை. ஏற்கனவே பார்த்து பழகிய வழக்கமான பேய் கதைதான் என்பதால், கதை பெரிதாக நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் மொத்த கதையை தனி ஒரு ஆளாக தாங்கி செல்கிறார் நாயகி ஹன்சிகா. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்து காட்சிகளை சோர்வடைய வைத்திருக்கிறார் ஹன்சிகா. சீனியர் நடிகை என்பதாலோ என்னவோ, இயக்குனர் பெரிதாக நடிப்பை கேட்டு வாங்க இயலவில்லை போல் தெரிகிறது. தொடர்ந்து, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்ட நட்ச்த்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார்கள்.

தங்கதுரை மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரின் காமெடி காட்சிகள் அனைத்தும் ஓல்டு ஃபார்மெட் எந்த இடத்திலும் பலனளிக்கவில்லை. கதை ஆங்காங்கே தொங்கிக் கொண்டே சென்றது படம் பார்ப்பவர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.

சாம் சி எஸ் இசையில் பின்னணி இசையில் அதிர வைப்பதாக கூறி, ஒரே டியூனை படம் முழுக்க போட்டு தள்ளியிருக்கிறார். ஆங்காங்கே ஒரு சில பேய் காட்சிகள் சற்று பயமுறுத்துகின்றன. K.A சக்திவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரே பலம். ”கார்டியன்” – கைவிடப்பட்டான்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *