Mon. Oct 7th, 2024
Spread the love

லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாகவும், அதை சரிசெய்ய 15 லட்சம் தேவைபட்டிருக்கிறது. இதுகுறித்துத் அவர் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருந்தபோது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். தற்போது கடனில் இருக்கும் தன்னால் இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரஜினி, லிவிங்ஸ்டனை அழைத்துத் முதல் கட்டமாக 15 லட்சத்தை கொடுத்திருக்கிறார். இன்னும் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும் கூறியிருக்கிறார். இது குறித்து ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டனே தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

‛‛என் மனைவி இன்று உயிரோடு இருக்க காரணமே ரஜினி சார் தான். பூஜை அறையில் அவர் படத்தையும் வைத்திருக்கிறோம். அவர் தான் எங்களுக்கு கடவுள். நான் உனக்கு சகோதரர் போல, வாங்கிக்கோ எனப் பணம் கொடுத்தார். அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்டப்போகிறார் எனவும் கேள்விப்பட்டேன். சந்தோஷம் ரொம்பவும் நல்ல மனசுக்காரர்” எனக் கூறியுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *