Sun. Oct 6th, 2024
Spread the love

காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். உடற்தகுதி, ஃபேஷன் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது போன்ற விஷயங்கள் மீதான அவரது ஆர்வம்தான் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சுவாரசியமான திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். அதற்காக அவர் களரி, சண்டை பயிற்சி மற்றும் சமகால நடனம் போன்ற கலை வடிவங்களில் பட்டறைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மகளிர் தினத்தின் சிறப்புகளை நினைவுகூரும் வகையில், சாக்ஷி அகர்வால் பெண் பத்திரிக்கையாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அங்கு அவர்கள் விளையாட்டு போட்டிகளில் விளையாடினர், உடற்பயிற்சிகள் செய்தனர், மேலும் சுவாரஸ்யமான உரையாடல்களையும் மேற்கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் தங்களின் வெற்றிக் கதைகளையும், வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எப்படி தாண்டி வந்தனர் என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *