’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இதனை தயாரித்திருந்தார். ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என இயக்குனர் கோகுல் கூறினார். அந்த படத்தின் கதாநாயகன் யார் என்ற தகவலை அப்போது அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் சிம்பு விலகினார். தற்போது விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.