Sun. Jan 19th, 2025
Spread the love

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வெகு விமர்சையாக நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரும், இயக்குனர் அட்லி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வுகள் முடிந்ததும் ரஜினி தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் தனி ஜெட் வகை சொகுசு விமானத்தில் சென்னை திரும்பினார். விமானத்தில் அமர்ந்து பயணிக்கும் படத்தை ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விழாவில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பும் அன்பான கவனிப்பும் கொடுத்த நீதா மற்றும் அம்பானி ஆகியோருக்கு நன்றி. அனந்த் மற்றும் ராதிகாவின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் ஒரு மேஜிக் போல இருந்தது. பசுமையான நினைவுகளுக்கு நன்றி. அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வார இறுதி நாட்களைக் கழித்தேன்” என்று கூறியுள்ளார். இந்த ஜெட் விமானம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், ரஜினியை கவுரவப்படுத்த இந்த பயணத்தை அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *