நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் ஆகியோருடன் பேச்சுச் வார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பல கட்டபேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இதில் கதாநாயகனாக நடிக்க துருவ் விக்ரம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துத் அதிகாரப்பூர்வர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறியப்படுகிறது.