சரண் அறிமுக இயக்கத்தில், பரத்வாஜ் அறிமுக இசையில், அஜித், , அறிமுக எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடித்த படம்’காதல் மன்னன்’. 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி வெளிவந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.
‘காதல் மன்னன்’ படம் ஒரு அழகான காதல் படமாக அமைந்து 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. பரத்வாஜ் இசையில் அமைந்த பாடல்களும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்து நினைவுகூர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அப்படத்தில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடலான ‘உனை பார்த்த பின்பு நான், நானாக இல்லையே” பாடலைப் பாடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கண்களை மூடித் திறந்தால், 26 ஆண்டுகள் பறந்துவிட்டது. இந்த வெள்ளியன்று மாலை 6 மணிக்கு அப்டேட் ஒன்றைத்தரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் துள்ளலான, இனிமையான காதல் படங்களில் ‘காதல் மன்னன்’ படமும் மறக்க முடியாத ஒரு படம்.