நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகும் “வளையம்” படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இயக்குனர் மனோபாரதி இயக்கும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம்ஸ் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். இதில் ‘தேவ்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி, சுரேஷ்மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்தப்பட பூஜையில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.