Thu. Oct 3rd, 2024
Spread the love

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகளுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, ,பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் அதிகாரிகளும், முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *