Sun. Oct 6th, 2024
Spread the love

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணண் தயாரித்து, இயக்கும் படம் “காந்தாரி”. “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர். கண்ணண் தற்போது கமர்ஷியல் கலந்த ஹாரர் படத்தை இயக்கி வருகிறார் . இதில் நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இதில் நரிக்குறவப்பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

LV.முத்து, கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு, பாலசுப்பிரணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுத, திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். படத்தின் எடிட்டிங் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.

படம்குறித்து இயக்குனர் ஆர். கண்ணண் பேசுகையில், “இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்” என்றார்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. கோடை விடுமுறையை குடும்பங்களோடு கொண்டாடும் வகையில் இப்படத்தினை வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *