ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகரபாண்டியன் எழுதி, இயக்குகிறார். இந்த படத்தில் ‘மைம்’ கோபி, வையாபுரி, ப்ளாக் பாண்டி, ‘ஜெயிலர்’ தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி உட்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகச் சொல்லும் இந்தப் படத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இடம் பெறும் என்கிறது படக்குழு.