Mon. Oct 7th, 2024
Spread the love

கடந்த வருடம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்தவர் சைஃப் அலிகான். தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ‘தேவரா’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக ஏற்கெனவே கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதே கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கையின் மேல்பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *