Wed. Oct 2nd, 2024
Spread the love

இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, சிவாவிற்கு முன்பே திரையுலகில் ஒரு நடிகராக அடி எடுத்துத் வைத்தவர். அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், பின்னர் வீரம், அண்ணாத்த உள்ளிட்டட் படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம் மலையாள திரை உலகில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்துத் வருகிறார். மலையாள பின்னணி பாடகியான அம்ரிதா சுரேஷ் என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களிலேயே கருத்துத் வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்துத் செய்து பிரிந்தார். இதை தொடர்ந்து சிறுவயதாக இருந்த அவரது மகள் பாப்புவை தன்னுடன் அழைத்துத்ச் சென்றுவிட்டார் மனைவி அம்ரிதா. நீதிமன்றத்திலும் இந்த வழக்கு வந்தபோது தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்கிற தீர்பு அவருக்கு சாதகமாகவே கிடைத்தது. இந்த சூழ்நிலையில் நடிகர் பாலா, கடந்த வருடம் எலிசபெத் என்கிற மருத்துத்வரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதுவரை தன் முதல் மனைவியை விவாகரத்துத் செய்ததற்கு காரணம் என எதுவும் கூறாமல் மவுனம் காத்துத் வந்தார் பாலா

இந்த நிலையில் சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது பத்திரிகையாளர்களை சந்தித்த பாலாவிடம்,   அவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட விவாகரத்திற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த  பாலா, “நான் பார்த்த அந்த ஒரு காட்சி தான் என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அந்த ஒரு நொடி என் வாழ்க்கையே இருண்டது போல எனக்கு தோன்றியது. இதன் பின்னணியில் இரண்டு பேர் அல்ல மொத்தம் மூன்று பேர் இருக்கிறார்கள். நிச்சயம் கடவுள் அவர்கர்ளுக்கு தக்க தண்டனை தருவார். எனது குழந்தை ஆணாக இருந்திருந்தால் புகைப்பட ஆதாரங்களுடன் அவற்றை வெளிப்படுத்தி இருப்பேன். ஆனால் என் பெண் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்து என்னால் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லைஎன்று கூறியுள்ளார். இது போன்றே சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டார் என்றும் தனது மகள்களின் எதிர்காலம் கருதி தான் எதையும் வெளிப்படையாக  கூற விரும்பவில்லை என மறுத்துத் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *