Fri. Aug 29th, 2025

டெலிவிஷன் விருந்து

Spread the love

இரு(க்)கை “சண்டை”

 ‘டிக்டாக்’ மூலம் பிரபலமாகி, பிறகு திரைப்பட நடிகையாக மாறியவர் சசி லயா. இலங்கையைச் சேர்ந்த இவர், தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார்.  செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடரில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தி ராவ் என்ற நடிகையுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஆர்த்தி ராவுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சசி லயா அமர்ந்துள்ளார். அந்த நாற்காலி தன்னுடையது என்றும், வேறு இடத்தில் உட்காரும்படியும் சசி லயாவிடம் ஆர்த்தி ராவ் சொல்லியிருக்கிறார்.  இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பிறகு குடுமிபிடி சண்டையாக மாறி உள்ளது.  இதனால் கோபமடைந்த ஆர்த்தி ராவ் சசி லயாவை அடித்ததாகவும், பதிலுக்கு சசி லயா ஆர்த்தி ராவை திருப்பி அடித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்நிலமை விபரீதமாவதை அறிந்த டி.வி தொடர் இயக்குனர், உடனே இருவரையும் சமாதானப்படுத்தினார். இச்சம்பவம் டி.வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “மிஸ்டர் மனைவி”

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார். வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என நிணைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும்.இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் டிஆர்பி குறைந்துள்ளதால் இத்தொடரை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இத்தொடரின், இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா, ஏற்கனவே செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் மிரட்ட வருகிறது  பிசாசினி!

வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், புதிய அமானுஷ்ய தொடராக பிசாசினி ஒளிபரப்பானது.
கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பானது. மொத்தம் 114 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பானது.
இந்தத் தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதை கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்டு செயல்படுகிறாள்.
அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும். காதல், பழிவாங்குதல் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டி என அனைத்தும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.
டிராமா மற்றும் அமானுஷ்யங்கள் நிறைந்த தொடராக பிசாசினி ஒளிபரப்பானது. ஹிந்தியில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ் ரசிகரகளுக்கு ஏற்ப மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், ஏராளமான ரசிகர்களைக் கவரந்தது.
இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு முன்பு ஒளிபரப்பான நாகினி தொடரைப் போன்று, பிசாசினி தொடருக்கும் ரசிகர்கள் அதிகம். அதனால், தற்போது மீண்டும் பிசாசினி தொடரை மறுஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு பிசாசினி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரும் நடிகை சுகன்யா!

நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான  ‘புது நெல்லு, புது நாத்துபடத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானாவர் நடிகை சுகன்யா. அதன்பின், ‘சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்

மலையாளத்தில் சில படங்களில் நாயகியாக சுகன்யா நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் டிஎன்ஏ என்கிற மலையாளப் படத்தில் தமிழ்ச் சூழல் கொண்ட பாடல் ஒன்றை சுகன்யா எழுதியிருந்தார்.

சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ஆனந்தம் தொடர் பெரிய வெற்றியடைந்தது. இத்தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். பின்னர், ஜன்னல் என்ற தொடரில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு வரை ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்ற இவர், 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீண்டும் தொடரில் நடிக்கவுள்ள இந்த செய்தி  அவரது ரசிகர்களுக்கிடையே  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி பங்கேற்கும்  ‘ஜோடி ஆர் யூ ரெடி’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அதன்படி சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2006-ல் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி 10 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

விஜய் டிவியில் நடனத்துக்கு முக்கியத்துவம் அளித்த  நிகழ்ச்சிகளில்  ‘உங்களில் யார் அடுத்த பிரவுதேவாநிகழ்ச்சியும் ஒன்று. இதில் பங்கேற்ற பலர் சினிமாவில் பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ், ஜோடிகள் நிகழ்ச்சி என  ஒளிபரப்பானது. இதன் பிறகு எந்த ஒரு நடன நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில்ஜோடி ஆர் யூ ரெடிஎன்ற புதிய நடன நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் நடிகை மீனா, நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி ஆகிய மூவர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.