Fri. Sep 12th, 2025
Ordinary man /thiraiosai.comOrdinary man /thiraiosai.com
Spread the love

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”.

அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

An-Ordinary-Man-Image-thiraiosai.com

இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ரவி மோகன் இயக்கவிருக்கும் “An Ordinary Man” படத்தின் ப்ரோமோ ரவி மோகன் அவர்களின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ப்ரோமோ ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் சேர்த்துள்ளது.

இப்படத்தில் ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்ய, ஹைட்ரோ இசை அமைக்கிறார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

An-Ordinary-Man-Image-thiraiosai.com

ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mgif
Madharaasi-thiraiosai.com