Thu. Mar 13th, 2025
Red flower/thiraiosai.comRed flower/thiraiosai.com
Spread the love

தமிழ் மொழியில் உருவாகி இருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்.’ ரூ. 30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோசெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX பணிகள் கண்காணிக்கப்படுகிறது.

ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். “ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும்,” என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.

இந்தப் படத்தில் விக்னேஷ் மற்றும் மனிஷா ஜஷ்னானி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், மோகன் ராம், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஃப்ளவர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2025 இல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *