Mon. Jan 19th, 2026
Spread the love

தமிழில் ‘தலைவி, சந்திரமுகி 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவரைத்தான் கங்கனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் வதந்தியும் கிளம்பியது. இந்நிலையில் அதற்கு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கங்கனா. “தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்.  மீடியாவிற்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். நிஷாந்த் பிட்டி ஜி மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வருபவர். நான் வேறொருவரைக் காதலிக்கிறேன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன். தயவு செய்து எங்களை சங்கடப்படுத்த வேண்டாம். ஒரு இளம் பெண் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்று சொல்வது சரியல்ல. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *