இளையராஜாவின் மகள் பவதாரிணி, (வயது 47) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பாவதாரிணியின் கணவர் ஓட்டல் தொழில் செய்கிறார். தம்பதிக்கு குழந்தை இல்லை. பிண்ணனி பாடகியான இவர் பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என் வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடங்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.