நாளைய இயக்குநர் – சீசன் 1′ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் ‘ROOT – Running Out of Time’ படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.
படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்தி சினிமாவில் ‘Stree’, ‘Helmet’, ‘Luka Chuppi’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் த்ரில்லராக உருவாகிறது.
கௌதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார்” என்றார்.
இயக்குநர் சூரியபிரதாப் கூறுகையில்,” “‘ROOT’ எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம்.