Mon. Jul 14th, 2025 10:36:14 PM
parandhu po/thiraiosaiparandhu po/thiraiosai
Spread the love

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம் தற்போது ‘பறந்து போ’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பிண்ணனி இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.

‘பறந்து போ’ படத்தில் இடம்பெற்றுள்ள “சன் பிளவர்” பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், ‘பறந்து போ’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *