தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க.பே ரணசிங்கம், பிரபு தேவாவின் குலேபகவாலி, ஐரா, டிக்கிலோனா மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தை தயாரித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளராக இருந்த ராஜேஷ் தற்பொழுது நடிகராகிறார் இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடலெடையை குறைத்துள்ளார். இப்படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக இருந்த ஜேபி தென்பதியன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அங்கீகாரம் என தலைப்பிடப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது.
இப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் கோர்ட் டிராமா கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை ஜிப்ரான் மேற்கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
