நடிகரும் இயக்குனருமான மனோஜுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது அவருடைய மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈரநிலம், மகாநடிகன், சாதுரியன், அன்னக்குடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் மனோஜ் நடித்திருந்தார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மாநாடு, ஈஸ்வரன் திரைப்படங்களிலும் சிம்புவுடன் இணைந்து மனோஜ் நடித்திருந்தார். விருமன் திரைப்படத்தில் கார்த்தின் அண்ணனாக திரையில் தோன்றியிருந்தார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் மனோஜ் பாரதியை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மனோஜ் பாரதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மனோஜின் உடலுக்கு இயக்குனர்கள் ஆர். கே. செல்வமணி, ராம், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள் மனோஜின் மறைவு திரைத்துறையினருக்கு பேரிழப்பு என்றும் தனக்கான முத்திரை பதிக்க இறுதிவரை போராடியவர் மனோஜ் என்றும் நடிகர் சரத்குமார் புதழ் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அனைத்து துறைகளிலும் முயன்று வெல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவர் மனோஜ் என்று நடிகர் நாசர் தெரிவித்திருந்தார்.
மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான திரை பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அதேபோன்று அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எந்த ஒரு இடத்திலும் பாரதிராஜாவின் மகன் என்று தன்னை காட்டிக் கொள்ளாதவர் என்று நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக அவர் பணியாற்றி இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் அவர் படித்திருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அவர் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை அவரது தந்தை பாரதிராஜா இயக்கி இருந்தார்.
இசைஞானி இளையராஜா மறைந்த நடிகர் மனோஜுக்கு தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். எனது நண்பனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று இளையராஜா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்திருக்கிறார். என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் அவர் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன், என்ன சொல்வது என்று எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று காலம் மிதித்திருக்கின்ற காரணத்தால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அவருடைய பூத உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நேரடியாக அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
