கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இன்று சண்டைக் காட்சி நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது.
கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் நடைபெற்ற ஷூட்டிங் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காலில் வீக்கம் ஏற்பட்டதால் நடிகர் கார்த்தி நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
பிறகு கார்த்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், அவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், படப்பிடிப்பை தொடர முடியாமல் நடிகர் கார்த்தி சென்னை திரும்பியுள்ளார்.