kingston-trailer-released-thiraiosai
kingston-trailer-released-thiraiosai
kingston-trailer-released-thiraiosai நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார். பேச்சிலர் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி இதிலும் நாயகியாக நடிக்கிறார்.
கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இரு பாடல்கள் ’ராசா ராசா’, ’மண்ட பத்திரம்’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.