Thu. Feb 13th, 2025
ak/vidamuyarchi/thiraiosai.comak/vidamuyarchi/thiraiosai.com
Spread the love

நடிகர் அஜித் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விடாமுயற்சி’.

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ‘விடா முயற்சி’ வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தின விடுமுறை முன்னிட்டு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *